Skip to main content

Posts

நிறங்களை போல மனிதர்கள் எழுதியது   சங்கீதா   வெங்கடேஷ்     அவளுக்கு சரியாக சமைக்கத் தெரியாது , மிகவும் பருமனாக இருக்கிறாள் என்று குறைபடும் கணவனும் , அவருக்கு நன்றாக உடை உடுத்த தெரியாது , அன்பை வெளிக்காட்டி பேசவோ பழகவோ தெரியாது என்று குறைபடும் மனைவியும் தங்கள் இறுதிக் காலம் வரையிலும் முழுமையான மனிதர்களை தேடி தேடி குறைகளுடனே நிறைவு பெறாத வாழ்வை முடித்து விடுகின்றனர் . கணவனை இழந்த பெண் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு அவர்களின் தந்தையுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறார் . நான் உங்கள் தந்தை பற்றிய பெருமைகளையோ தனித்துவமான நல்ல குணங்களையோ   உங்களுக்கு கூறப் போவது இல்லை . நான் சொல்வது உங்களுக்கு சங்கடமாகவும் இருக்கலாம் . நீங்கள் என்ஜின் கோளாறான வண்டியின் சத்தம் கேட்டு இருப்பீர்கள் . கர்ர்ர் கொர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர் . இதை ஒத்து இருக்கும் உங்கள் தந்தையின் குறட்டை சத்தம் . பல நாட்களில் அவருடைய சத்தம் கேட்டு அவரே விழித்த நாட்கள் உண்டு . அப்பொழுது நான் தெருவில் நாய்கள் குரைத்தது
Recent posts
அடை காக்க முட்டைகளல்ல பிள்ளைகள் !   எழுதியது சங்கீதா வெங்கடேஷ்        தெரிந்த மாணவர் ஒருவர் (19 வயது ) கல்லூரிக்கு காலையில் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வருவார் . " ஏன்பா நீ பஸ்ஸில் வருவதில்லையா ? எனக்கேட்டால் ஒரு நடைப்பயிற்சியாகவும் இருக்கும் பணத்தையும் சேமிக்கலாமே என்றார் . இந்த காலத்திலும் இப்படியொருவனா ? என்று ஆச்சரியமடைந்தேன் . மேலும் நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் ஆச்சரியத்தைக் கூட்டிக் கொண்டே சென்றன . மேலும் நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் ஆச்சரியத்தைக் கூட்டிக் கொண்டே சென்றன . வீட்டின் வரவு செலவு கணக்கை எல்லாம் இவர்தான் பார்த்துக் கொள்கிறார் . அப்பா , அம்மா கல்வியறிவற்றவர்கள் . " மேம் 7 ஆம் வகுப்பிலிருந்தே வீட்டு செலவுக்கு கணக்கை பார்க்க ஆரம்பித்தேன் ". இன்றுவரை நிலத்தில் விதைக்கும் கணக்கிலிருந்து அறுப்பு கூலி வரை நான்தான் கவனித்துக் கொள்கிறேன் . சீட்டுக் கட்டி சேமித்து இரண்டு அக்காக்கள் திருமணம் என எல்லாம் பெற்றோருடன் இணைந்து நானே நடத்தி வைத்தேன் என்றார் . காலை ம